வாடகையாளர்கள் விடயத்தை ஆராய்ந்த அமைச்சரவை !
கொரோனா தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் வாடகை வீடுகள் – கடைகள் – அறைகளில் இருப்போர் எதிர்நோக்கும் பிச்சினைகள் குறித்து இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் கூடிய அமைச்சரவை விரிவாக ஆராய்ந்தது .
இந்த விடயம் குறித்து ”தமிழன் ” செய்திப்பிரிவு ஏற்கனவே பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தது. இதனை இன்றைய அமைச்சரவையில் பிரஸ்தாபித்த அமைச்சர் தேவானந்தா , இந்த வாடகை பிரச்சினையால் மக்கள் பல தரப்பினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் இந்த சூழ்நிலையில் வாடகைக்கு கடைகளை – வீடுகளை – அறைகளை விட்டுள்ள உரிமையாளர்கள் மனிதாபிமான அடிப்படையில் நடந்துகொள்ள வேண்டுமெனவும் ,அரசும் இந்த விடயத்தை கவனத்தில் கொள்ளவேண்டுமென அமைச்சர் டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து இதோ தொடர்பில் உடனடி கவனத்தை செலுத்துவதென அமைச்சரவை தீர்மானித்தது.இந்த விடயத்தில் என்ன செய்யலாம் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமரிடம் வினவியுள்ளார்.அதனை ஆராய்வதாக பிரதமர் அங்கு தெரிவித்துள்ளதுடன் ,இந்த விடயத்தில் மனிதாபிமான அடிப்படையில் நடக்குமாறு வீடு – கடைகளின் உரிமையாளர்களிடம் அரசு கேட்குமெனவும் தெரிவித்துள்ளார்.
நாளை அரச அதிகாரிகளுடன் இதுபற்றிப் பேசவும் ஏற்பாடாகியுள்ளது. இது தொடர்பில் அரசு உத்தியோகபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுமென அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன.