வாகனங்களில் பயணிக்கும் போது முகக்கவசம் அவசியம்
முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு இன்று (23) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுப்பரவலில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பில் துண்டு பிரசுரம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு பொலிஸாரினால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆலோசனைக்கமைய மேல் மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் இந்த விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன்போது முகக்கவரமின்றி பயணித்த நபர்களை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்,
கொரோனா தொற்றுப்பரவல் எதிரவரும் டிசம்பர் மாதம் குறிப்பாக பண்டிகை காலத்தில் பின்பற்றவேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடேர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பணிகள் ஆரம்பேமாகியுள்ளன.
அநேகமானவர்களுக்கு முகக்கவசம் அணிவதில் உள்ள முக்கியத்துவம் மீண்டும் மர்ந்துவிட்டது. அதிகமானவர்கள் ஒரே வாகனத்தில் பயணிக்கும்போது முகக்கவசம் இல்லாமல் பயணிக்கிறார்கள்.
முச்சக்கர வண்டி சாரதிகள் பயணிகளை ஏற்றி செல்லும்போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.அதேபோன்று கவனமின்றி ஒருவர் செயற்ப்படுவாராக இருந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூப்பிட்டுள்ளார்.