வவுனியா இ.போ. சபை பஸ் சாரதிக்கு கொரோனா தொற்று
வவுனியா இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சை ஒன்றுக்காக சென்றபோது, மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் போதே அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அவருடன் தொடர்பை பேணிய இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.