வவுனியாவில் இளைஞர் குழு செய்த அட்டகாசம்- இருவர் காயம்
வவுனியா-வைரவபுளியங்குளம் பகுதியில் நேற்றிரவு (31) இளைஞர் குழு ஒன்று வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து கைகலப்பில் ஈடுபட்டதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா-வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள மதுபானசாலையில் மது அருந்தி விட்டு வந்த இளைஞர் குழுவொன்று மதுபானசாலைக்கு முன்பாக இருந்த வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து அதன் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
மேலும், அருகில் இருந்த வர்த்தக நிலையங்களில் நின்றோர் மற்றும் வீதியில் நின்றோரையும் அச்சுறுதியுள்ளனர்.
இதன்போது அப்பகுதியில் ஏற்பட்ட அடிதடி மற்றும் கைகலப்பில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.