வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகிறது.
ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இடம்பெறும் முதலாவது சந்திப்பு இது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
எவ்வாறாயினும், இந்த சந்திப்பின்போது எந்தவொரு ஒப்பந்தமும் எட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த சந்திப்பின் மூலம் குறிப்பிடத்தக்க விடயங்கள் எதனையும் எதிர்பார்க்க முடியாது எனவும் அமெரிக்க மூத்த அரச அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.