வயல் பிரதேசத்தில் இருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு- வெல்லாவெளியில் சம்பவம்
வெல்லாவெளி-நெல்லிக்காட்டு பிரதேசத்தில் உள்ள வயல் பிரதேசத்தில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெல்லிக்காட்டு பிரதேசத்தைச்சேர்நத (73) வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான அழகிப்போடி தற்கராசா என்பவரே சடலமாக மீட்கப்பட்;டவராவார்.
களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மண்முனை நிருபர்