லூசியானாவை நெருங்கும் சூறாவளி
அமெரிக்காவின் லூசியானா கடற்கரையை நெருங்கும் ‘பெரி’ சூறாவளி வலுப்பெற்றுள்ளது.
மணிக்கு 75mph (120km / h) என்ற வேகத்துடன் சூறாவளி நிலப்பரப்பை நெருங்குகிறது.
சூறாவளி நியூ ஆர்லியன்ஸுக்கு மேற்கே ஒரு பகுதியை பெரிதும் பாதிக்கும் என கூறப்படுகிறது.
அபாயகரமான பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை காலை 60,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக கூறப்ப்டுகிறது.