லிந்துலை எல்ஜீன் பகுதியில் புனித மரியாள் சிலை உடைப்பு
லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்ஜீன் தோட்டத்தில் நேற்றிரவு (26) இனந்தெரியாத நபர்களினால் புனித மரியாள் சிலை உடைக்கப்பட்டு ஆற்றின் ஓரத்தில் வீசப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த பிரதேச மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையக பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இவ்வாறு சிலைகள் உடைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
இவ் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
டி.சந்ரு, செ.திவாகரன்
இதையும் படிக்க | இன்று முதல் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு