லிட்ரோ எரிவாயு லங்கா, லிட்ரோ எரிவாயு டெர்மினல் நிறுவனங்களுக்கு கோப் குழு அழைப்பு
வரையறுக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு லங்கா மற்றும் வரையறுக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு டெர்மினல் இரண்டு நிறுவனங்களுக்கும் நாளைய தினம் கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாளை மறுதினம் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரச கணக்குகள் பற்றிய குழுவான கோபா குழு நாளை கூடவுள்ளது.
இதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.