லங்கா சதொசவின் தலைவர் பதவி நீக்கம்
சதொச நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்த நுஷாட் பெரேரா, உடன் அமுலுக்கு வரும் வகையில் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சீனி இறக்குமதியின்போது மோசடியான நிறுவனத்துடன் இணைந்து அரசாங்கத்துக்கு பல கோடி ரூபா நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இந்தப் பதவிநீக்கம் இடம்பெற்றுள்ளது.
சதொச நிறுவனத்தின் பதில் தலைவராக வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.