ருகுணு பல்கலை மாணவரின் தந்தைக்கு கொரோனா !
ருகுணு பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
பூகொட ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பெண் பணியாளர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அதேபோல ஹெலா என்ற ஆடைத்தொழிற்சாலையின் திஹாரிய பகுதி தொழிற்சாலையின் பணியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.இது தொடர்பில் அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.