ரஷ்ய தொலைநோக்கி விண்ணில்
ரஷ்ய விண்வெளி ஆய்வின் முக்கிய தொலை நோக்கி ஒன்று கசகஸ்தானின் பைக்கோனூரிலிருந்து ஏவப்பட்டது.
ஸ்பெக்ட்ர்-ஆர்ஜி தொலைநோக்கி என்பது ஜெர்மனியுடனான கூட்டு முயற்சியாகும்.
இது எக்ஸ்-கதிர்களை கொண்டு முழு விண்வெளியையும் விரிவாக வரைபடமாக்கும்.
இந்த தகவல் பிரபஞ்சத்தின் பெரிய அளவிலான கட்டமைப்பைக் கண்டறிய உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஸ்பெக்டர்-ஆர்ஜியால் அண்ட விரிவாக்கத்தின் விரைவான நடத்தை பற்றிய புதிய நுண்ணறிவுகளை வழங்க முடியும் என்று நம்பபடுகிறது.
இது விண்மீன் திரள்களின் மையத்தில் இருக்கும் மிகப்பெரிய கருந்துளைகளையும் அடையாளம் காணும்.