ரவி சாஸ்திரியின் பதவிக்கு ஆபத்தா?
உலகக்கிண்ண கிரிக்கட் தொடர் தோல்வியை அடுத்து, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு, இந்திய அணிக்கான முக்கிய பதவிகளுக்கு புதிதாக விண்ணப்பங்களை கோரவுள்ளது.
அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் புதிய விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் தற்போது அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருக்கின்ற ரவி சாஸ்திரியும் மீண்டும் விண்ணப்பிக்க நேரும் என்று கூறப்படுகிறது.
ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் இந்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய செல்லும் சுற்றுலாவுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.