யுகதனவி விவகாரம் சட்டவிரோத, இரகசிய முன்னெடுப்பு – ஜே.வி.பி. நீதிமன்றில் மனுத்தாக்கல்
அமெரிக்க நிறுவனமொன்றுக்கு கெரவலப்பிட்டி, யுகதனவி மின்நிலையத்தை ஒப்படைப்பதற்கு எதிராக இன்று(26) மக்கள் விடுதலை முன்னணி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
கெரவலப்பிட்டி, யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு கொடுப்பது சட்டவிரோதமானது என்றும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் செயற்பாட்டுக்குழுவின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தாா்.
சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் சட்டவிரோத இரகசிய முன்னெடுப்பு என்றும் அந்தக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.