யாழ். வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் படுகாயம்!
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரணவாய் மேற்கு, அந்திரான் பகுதியில் இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த தே.பாலகுமார் (23) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான நபரின் வீட்டுக்கு தலைக்கவசம் அணிந்து சென்ற மூவர் வீட்டாரை அச்சுறுத்தி விட்டு சென்றுள்ளனர்.
மீண்டும் அதிகாலை வந்தவர்கள் கதவினை உடைத்து உள்நுழைந்து இளைஞரை வெட்டியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.