யாழ் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த கொழும்பு மாது உயிரிழப்பு !
கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் இருந்து சென்று யாழ்ப்பாணம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 78 வயது மாது ஒருவர் காய்ச்சல் காரணமாக இன்று உயிரிழப்பு.
காய்ச்சல் காரணமாக அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.
பாத்திமா ஹன்சி மொஹம்மட் என்ற இவர் கொரோனா சோதனைகளின்போது எந்த தொற்றுக்கும் ஆளாகியிருக்கவில்லை . ஆனால் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார் என சொல்லப்பட்டது.