யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு
யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு
-யாழ் செய்தியாளர் –
ஊரெழு பர்வவர்த்தனி அம்மன் ஆலயத்தின் மணிக்கூட்டு குளவிக் கூடு கலைந்து குளவி கொட்டியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.பலர் காயமடைந்துள்ளனர்.
மீட்பு பணிக்கு சென்ற பொலிசாரை குளவிகள் தாக்க முற்பட பொலிசார் வெளியேறியுள்ளனர். அம்புலன்ஸ் சாரதி உதவியாளரையும் தாக்க முற்பட்ட போதிலும் அவர்கள் அங்கிருந்து காயமடைந்தவர்களை மீட்டு சென்றுள்ளனர்.
யாழ்.மாநகர சபை தீயணைப்பு படையினர் அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.