யாழில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்கள்
யாழ். கல்வியங்காடு கட்டைப்பிராய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த வயோதிபப் பெண்ணின் 2 பவுண் தங்கச்சங்கிலியை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, யாழ். உரும்பிராய் – கிருஷ்ணன் பகுதியில் அமைந்துள்ள கமநல சேவைகள் திணைக்களத்தில் வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் கலப்பையினை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
உழவுத் தேவைக்காக கமநல திணைக்களத்தில் வைக்கப்பட்டிருந்த கலப்பையே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.