மோடியின் அழைப்பையேற்று இந்தியா செல்கிறார் கோட்டா !
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய கோட்டபாய ராஜபக்சவை இன்று மாலை தொலைபேசியூடாக தொடர்புகொண்டு வாழ்த்தினார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி .
பாரம்பரிய தொடர்புகள் கொண்ட இரு நாட்டு உறவுகள் மேம்பட ஒன்றுபட்டு செயற்பட வேண்டியதன் அவசியத்தை இதன்போது வலியுறுத்திய மோடி , இந்தியா வருமாறும் கோட்டாவுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்திய பிரதமரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கோட்டாபய விரைவில் புதுடில்லி வருவதாக உறுதியளித்தார் என அறியமுடிந்தது.