மொஸ்கோ நகர நாடாளுமன்ற தேர்தல் ஆளுங்கட்சி பின்னடைவு
மொஸ்கோ நாடாளுமன்ற தேர்தலில், ரஷ்யாவின் ஆளும் ஐக்கிய ரஷ்யக் கட்சி, மிகப்பெரிய சரிவினை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
45 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மூன்றில் ஒரு ஆதரவினை இழந்துள்ளது. எனினும் 26 இடங்களில் வெற்றிபெறும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது
பெரும்பாலான எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கம்யூனிஸ்டுகளும், சுயேட்சைக் குழுக்களும் வெற்றிகளைப் பெற்றுள்ளன.
ஏறக்குறைய அனைத்து முடிவுகளுடனும், வெளியாகியுள்ள நிலையில், 26 இடங்களில், ஐக்கிய ரஷ்யா வெற்றிபெற்றுள்ளது.
ரஷ்ய தலைநகரில் கட்சியின் தலைவர் ஆன்ட்ரி மெட்டல்ஸ்கி இந்தத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சி 13 இடங்களில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதேவேளை, தாராளவாத “யப்லோகோ” கட்சி மற்றும் இடதுசாரி கட்சியான “ஜஸ்ட் ரஷ்யா” தலா மூன்று” இடங்களில் வெற்றிபெறும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.