மைக்ரோசொப்டின் சோதனை முயற்சி வெற்றி
அமெரிக்காவின் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் ஜப்பானிய கிளை ஆளணியின் பணிவலு குறித்து நடத்திய சோதனை முயற்சி ஒன்றின்போது, வெற்றிகரமாக முடிவுகள் வந்துள்ளன.
வாரத்தின் எல்லா நாட்களுக்கும் ஊதியம் வழங்கி அதில் நான்கு நாட்கள் மட்டுமே பணிபுரியும் ஊழியர்களின் உற்பத்தி திறன் 40 சதவீதம் அதிகரித்திருந்தமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல், அதிக உற்பத்தித் திறன் கொண்டவர்களாக இருப்பதாகவும் சோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஜப்பானிய கிளையில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் எல்லா வெள்ளிக்கிழமைகளும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டு இந்த சோதனை முயற்சி நடத்தப்பட்டிருந்தது.
ஓகஸ்ட் மாதத்தில், மைக்ரோசொப்ட் ஜப்பானிய கிளை, ‘Work-Life Choice Challenge Summer 2019’ என்ற தொனிப்பொருளில் இந்த பரிசோதனையை முன்னெடுத்திருந்தது.
மொத்தமாக, 2,300 பேர் கொண்ட பணியாளர்களுக்கு ஐந்து வெள்ளிக்கிழமைகள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்;டமை குறிப்பிடத்தக்கது.