மே 9 சம்பவம்: மேலும் 14 பேர் கைது
கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடாளாவிய ரீதியாக ஏற்பட்ட வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனுடன் தொடர்புடைய 857 சம்பவங்கள் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,056ஆக அதிகரித்துள்ளது.
அதில் 1,150 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.