மேலும் 542 கொவிட் நோயாளர்கள் அடையாளம்
நாட்டில் மேலும் 542 கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இதுவரை 520,172 கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் மேலும் 652 பேர் கொவிட்19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரையில் கொவிட்19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 459,298 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 47,815 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.