மூன்றாம் கட்ட தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான அறிவிப்பு
கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு வழங்கப்படும் மூன்றாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு 60 வயதுக்கு மேற்பட்ட சகலரிடமும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மருத்துவக் கல்லூரிகளுக்கிடையிலான குழு மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் ஆகியன இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.
இதுவரை காலமும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத முதியவர்கள், தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டு பூரண பாதுகாப்பை பெற வேண்டுமெனவும் அவர்கள் கோரியுள்ளனா்.
மேலும், சுகாதார பணியாளர்கள் தமக்குரிய தடுப்பூசியை பெற்றுக்கொண்டு மூன்றாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்ளநவது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனா்.
எதிர்வரும் பண்டிகை மற்றும் புத்தாண்டு பருவகாலத்தில் மக்கள் ஒன்றுகூடுவதால் நோய் பரவக்கூடிய ஆபாத்தையம், ஒமினக்ரோன் என்றழைக்கப்படும் புதிய கொரோனா திரிபு பரவலடையக் கூடிய ஆபத்து நிலைதொடர்பில் கருத்தில் கொண்டே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.