முல்லைத்தீவில் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள்
முல்லைத்தீவு-சுதந்திரபும் பகுதியில் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடத்தில் இன்று (02) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இன்று பகல் 02 மணிக்கு அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
முல்லைத்தீவு நீதவான், பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட துறைசார் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.