முத்தையா பிரபாகரனுக்காக தமிழில் பேசிய சனத் ஜயசூரிய!
முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி வீரரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரிய முதன்முதலில் தமிழில் பேசி பொதுஜன முன்னணி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் முத்தையா முரளிதரனின் சகோதரர் முத்தையா பிரபாகரனின் வெற்றியை உறுதிப்படுத்தும் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று (30) நுவரெலியாவில் இடம்பெற்றது.
இதன் போது சனத் ஜயசூரிய தமிழில் பேசி பிரபாகரனுக்கு வாக்கு கேட்டதுடன், தான் பேசும் தமிழில் எதுவும் பிழைகள் இருப்பின் தன்னை மன்னித்து கொள்ளுமாறும் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன் போது அவர் தெரிவித்த கருத்து:
அனைவருக்கும் வணக்கம், நாம் எல்லோரும் இலங்கையர்கள். நாட்டை அபிவிருத்தி செய்வது நமது கடமை, அதனால் நுவரெலியா மாவட்டத்தில் பிரபுவை தெரிவு செய்ய வேண்டும். நன்றி என தெரிவித்துள்ளார்.