முச்சக்கரவண்டி விபத்து – மூவர் காயம்
மஹதோவையில் இருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
பசறை நகருக்கு அருகாமையில் முதலாவது மைல் கல்லுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டி வீதியில் குடை சாய்ந்ததில் மூவர் சிறு காயங்களுக்குள்ளானதோடு முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளதை படங்களில் காணலாம்.
(பதுளை நிருபர்)