முச்சக்கரவண்டி விபத்து ஒருவர் காயம்
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் சலன்கந்த பிரதான வீதியின் ஒட்டரி பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு காயங்களுக்கு உள்ளாகியதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
சலன்கந்த பகுதியிலிருந்து டிக்கோயா நோக்கி வந்த முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டை மீறி இன்று (17) காலை 9 மணியளவில் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து முருங்கை மரமொன்றில் சிக்கி நின்றுள்ளது.
தெய்வாதீனமாக பாரிய விபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.