முக்கிய பொலிஸ் பதவிகளில் மாற்றம்
மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்
இவர் இதற்கு முன்னர் சி.ஐ.டியின் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளதுடன் ரொஹான் பிரேமரத்ன சுமார் 10 மாதங்கள் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளாா்.
மேலும், போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இந்திக்க ஹபுகொட நேற்று (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன் போக்குவரத்து பிரிவு பணிப்பாளராக பணியாற்றியுள்ளாா்.