மீனவர் ஒருவர் கடலில் வீழ்ந்து உயிரிழப்பு
மன்னார் செளத்பார் பகுதியில் மீன்பிடிப்பதற்காக வலைபாய்ச்ச சென்ற மீனவன் எதிர்பாராத விதமாக மன்னார் புகையிரத பாலத்திற்கு அருகாமையில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்து காணாமல் போன நிலையின் இன்று (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் ஜாக்கிலின் றாகல் என்ற 29 வயதுடைய மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வருகைதந்த மன்னார் பொலிஸார் மரணம் குறித்து மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்