மஸ்கெலியா-நல்லதண்ணி வீதியின் போக்குவரத்து பாதிப்பு
மஸ்கலியா-நல்லதண்ணி வீதியின் ரிக்காட்டோன் பகுதியில் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது அருகில் இருந்த மின்கம்பம் ஒன்று உடைந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மின்கம்பம் வீதியில் வீழ்ந்துள்ளதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதியைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.