மலையகத்தில் இருவேறு பகுதிகளில் மண்சரிவு
மலையகத்தில் தொடரும் மழையுடனான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிகள் ஏற்பட்டுள்ளன.
அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவி அத்தியட்சகர் ரஞ்சித் அழககோன் தெரிவித்தார்
நேற்றிரவு (27) பெய்த அடை மழையில் ஹட்டன் பிரதான பஸ் தரிப்பிடத்தில் மண்மேடு சரிந்தமையினால் மின் கம்பமொன்றும் உடைந்துள்ளதுடன் ஹட்டன் காமினிபுர பிரதேசத்தில் மழை நீர் பெருக்கெடுத்த நிலையில், அங்கிருந்த பஸ் தரிப்பிடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஹட்டன் நல்லத்தண்ணி பிரதான வீதியின் மோகினி எல்ல பகுதியிலும் மண்மேடு சரிந்துள்ள நிலையில், தொடர்ந்து அப்பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.