மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கங்குலி
மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சௌரவ் கங்குலி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு கங்குலிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் கங்குலி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
இது தொடர்பில் கங்குலி கருத்து வெளியிடுகையில், தான் நலமுடன் இருப்பதாகவும், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி எனவும் தெரிவித்தார்.