மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
டெங்கு, கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் டெங்கு காய்ச்சல் காரணமாகவே அதிகளவான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர், ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் பணிப்பாளர் வைத்தியர்,ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.
மேலும், தற்போது பரவிவரும் வைரஸ் காய்ச்சல் குறித்தும் அதிகளவில் அவதானம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.