மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
பிரதான எட்டு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சில பிரதேசங்களுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகொட, அக்மீமன, ஹொரணை, வெலலவிட, இங்கிரியா, அகுரணை, மெததும்பர, பாஹததும்பர, உடு தும்பர, பன்வில, பூஜாபிட்டிய, ஹதரலியத்த, தெல்தொட்ட, யடிநுவர, உடபலாத, கங்காவத்த கோரல, உடுநுவர, கங்கா இஹல கோரல, ஹரிஸ்பத்துவ, பஸ்பாகே கோரள, தொழுவ, புலத்கோபிட்டிய, வரக்காபொல, கேகாலை, அல்லவபிட்டிய, பொல்காவலை, நாராம்மலை, மாவத்தகம, ரத்தொட்ட உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விதிக்ப்பட்டுள்ளது.