மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி
மசாஜ் நிலையம் என்ற கொள்ளுபிட்டி, எல்பிரட் ஹவுஸ் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது, அந்த விடுதியின் முகாமையாளர் உள்ளிட்ட மேலும் 10 போ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா்.
அதன் முகாமையாளர் (பெண்) கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடையவர் என்பதுடன், அத்திடிய, களனி,ஓபநாயக்க, கோகரெல்ல, பிலியந்தலை, மாத்தறை, கண்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 27, 32, 33, 41, 42, 52 வயதுடைய பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனா்.
இந்த விபசார விடுதி முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டத்துக்கு மாதாந்தம் மூன்றரை கோடி ரூபா வாடகை செலுத்தப்படுவதாக பொலிஸாா் குறிப்பிட்டுள்ளனா். சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.