போதைப்பொருளுக்கு அடிமையான பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணை
மதுபானம் மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் காவல்துறை தலைமையகத்தினூடாக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய பொலிஸ்மா அதிபர், மேல் மாகாணத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ள 37 பொலிஸ் உத்தியோகத்தர்களின் விபரங்களை சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் 28 பேர் கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.