பொது சுகாதார பரிசோதகர்களின் ஒத்துழைப்பின்றி பொதுத் தேர்தலை நடத்துவது கடினம் – தேசப்பிரிய
பொது சுகாதார பரிசோதகர்களின் ஒத்துழைப்பின்றி பொதுத் தேர்தலை நடத்துவது சிரமமான விடயம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் இல்லாவிடினும் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஒத்துழைப்பின்றி பொதுத் தேர்தலை நாடாத்துவது சவாலானது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் நேற்று (17) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நேற்று பிற்பகல் முதல் கொவிட் 19 ஒழிப்பு நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொது மக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாவதால் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கப்போவதில்லை என சுகாதார அமைச்சர் அண்மையில் அறிவித்திருந்தார்.
சுகாதார அமைச்சரிக் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று (18) இரண்டாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.