பேராதெனிய பல்கலையில் 64 மாணவர்களுக்கு கொவிட்
பேராதெனிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 64 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளாகவும், அவர்கள் பல்கலைக்கழக இடைநிலை சிகிச்சை மத்திய நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வருவதாக அந்த பல்கலைகழகத்தின் பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளாா்.
பல்கலைக்கழகத்தை முழுமையாக ஆரம்பித்ததன் பின்னர், சுகாதார வழிமறைகளுக்கமைய பல்கலைக்கழக மானியங்களை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள முறைகளை பின்னபற்றி, கவரையறுக்கப்பட்டளவில் மாணவர்களை அழைத்து கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்கள் 03 – 04 மாதங்களாக வழமைபோன்று கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனா். ஒருசில மாணவர்கள் ஒன்லைன் முறையினூடாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனா்.
அதுபோன்று கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன. இதுவரையில், 4 ஆயிரத்து 400 மாணவர்கள் வரையில் தங்கியிருந்து கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனா். நடைமுறை பயிற்சி மற்றும் பரீட்சை நடவடிக்கைகளுக்கு தேவையான மாணவர்களை வைத்திய பீடம், பல் வைத்திய பீடம் மற்றும் சுகாதார வைத்திய பீட மாணவர்கள் அவர்களுக்கு தேவையான மருத்துவ பயிற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றனா்.
எங்கள் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியல் வல்லுநர்கள் குழு, மாணவர்களுக்கு நோய் பரவுவதைத் தடுக்க ஒரு குழுவை அமைத்துள்ளது. அவை தேவையான வழிகாட்டுதலை பெற்றுக்கொடுக்கின்றது. குழுவின் வழிகாட்டுதலின்படி விளையாட்டு மைதானங்கள் மற்றும் நீச்சல் தடாகங்களும் திறக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.