பெண்ணுக்கு எமனாக மாறிய கூந்தல்- வெலிகந்த பகுதியில் சம்பவம்
வெலிகந்த பிரதேசத்தில் மா அரைக்கும் இயந்திரமொன்றில் கூந்தல் சிக்கி பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
குறித்த பெண் மா அரைத்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக அவரது கூந்தல் அந்த இயந்திரத்திற்குள் சிக்குண்டுள்ளதாகவும், இதன் காரணமாக அப்பெண் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிதனர்.
வெலிகந்த-மஹிந்தாகம-கடவத்தமடு பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிகந்த மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.