பிலியந்தலையில் 75 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது
ஹெரோயின் பொதி செய்துகொண்டிருந்த இருவர், பிலியந்தலை – சுவாரபொல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீடொன்றிற்குள் இவர்கள் ஹெரோயினை பொதி செய்துகொண்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்த 75 கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
39 வயதான ஆண் ஒருவரும் 43 வயதான பெண்ணொருவரும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தின் அனுமதியுடன் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சந்தேக நபர்களை கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.