பிரித்தானிய கத்திக்குத்து; இருவர் பலி, சந்தேகநபரும் உயிரிழப்பு
பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் அமைந்துள்ள பிரபலமான “லண்டன் பிரிட்ஜ்’இல் நேற்றைய தினம் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என பிரித்தானிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த கத்திக் குத்து சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு, தாக்குதலை நடத்தியவர் 28 வயது உஸ்மன் கான் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் 2012ஆம் ஆண்டு தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்காக சிறைத்தண்டனை அனுபவித்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த தாக்குதலை மேற்கொண்ட உஸ்மான் கான் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் லண்டன் பாலம் பகுதி முற்றாக பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரித்தானியத் தலைநகர் லண்டனின் மத்திய பகுதியான சுற்றுலாப் பயணிகளும் அதிகமாக நடமாடும் பிரதேசமாக இருந்துவரும் ‘லண்டன் பிறிட்ஜ்’ (பாலம்) பகுதியில் நேற்றைய தினம் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முதலில் துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில்இ கத்திக்குத்து நடத்திய நபரை பிடிப்பதற்காகவே பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஏராளமான பொலிஸபர் குவிக்கப்பட்டு பெரும் முற்றுகை நடவடிக்கையொன்றும் அங்கு மேற்கொள்ளபட்டது.
கத்தியுடன் புகுந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தியமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஜார் கத்திக்குத்தை நடத்திய நபரை சுட்டு பிடித்துள்ளனர். முதலில் அந்த நபர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரித்தானியாவின் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரும் லண்டன் பிரிஸ் பகுதிக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.