பிரதிப் பொலிஸ் மா அதிபர்மார் இருவருக்கு சேவை நீடிப்பு
நிதி மோசடி விசாரணைப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் மத்திய – ஊவா – சபரகமுவ மாகாணங்களுக்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம் .விக்கிரமசிங்க ஆகியோருக்கு ஒரு வருட கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது .
இன்று கூடிய அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியது.
ரவி செனவிரத்னவின் பதவிக்காலம் ஏப்ரல் 22 ஆம் திகதியும் ,விக்கிரமசிங்கவின் பதவிக்காலம் ஏப்ரல் 21 ஆம் திகதியும் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.