பிரதமர் கதிரையில் மாற்றம்? அமைச்சரவை ஊடக சந்திப்பில் கேள்வி..!
எதிர்வரும் 2022ஆம் வருடம் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை அல்லது நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவை நியமிப்பதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்தவும், வெளிநாட்டுக் கடன் பெற்றுக்கொள்ளவது உள்ளிட்ட காரணிகளுக்காக இவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் ஆயத்தமாகிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஆனால், இந்த கேள்வியில் எந்தவித அர்ததமும் இல்லையென அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண பதிலளித்தார்.