பாராளுமன்ற தேர்தலா ? – ரணில் விசேட அறிக்கை !
பாராளுமன்ற தேர்தலொன்று குறித்து விரைவில் சபாநாயகர் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்துவது தொடர்பில் மஹிந்த தரப்பு விடுத்த வேண்டுகோளையடுத்து ரணிலின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை பாதுகாப்பு- ஊடக இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார் .
இதற்கிடையில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் கோட்டாவின் வெற்றிக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
கோட்டாவுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.