பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்தா பாராளுமன்ற ஊழியரை கைது செய்தீர்கள் ? – விமல் கேள்வி
பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்தா பாராளுமன்ற ஊழியர் ஒருவரை கைது செய்தீர்கள் என இன்று பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கேள்வியெழுப்பியுள்ளார் விமல் வீரவன்ச எம் பி .
பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பான பாராளுமன்ற செயற்பாடுகள் முடியும்வரை அமைச்சர் றிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுக்காமல் ஒத்தி வைக்க ஆளுங்கட்சியின் சார்பில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இங்கு கேட்டுக் கொண்டார் .
ஆனால் அதற்கு எதிர்க்கட்சி சார்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.விமல் வீரவன்ச , தினேஷ் குணவர்தன , பிரசன்ன ரணதுங்க ஆகியோர் எதிர்ப்பை வெளியிட்டனர்.
எவ்வாறாயினும் இதுவிடயத்தில் பிரதமருடன் பேசி ஒரு முடிவை தருவதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற ஊழியர் கைது செய்யப்பட்டமை பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்தல்லவென்பதால் போலி காரணங்களை கூறாமல் உடனடியாக விவாதத்தை நடத்த வேண்டுமென விமல் இங்கு கேட்டுள்ளார்.