பாட்டலிக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணைகள் ஒத்திவைப்பு
ராஜகிரியவில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.