பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையர் குறித்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட தகவல்
பாகிஸ்தான்-சியல்கொட் நகரில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட இலங்கையர் குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் விசாரணை நடத்தும் என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பில் அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஊடாக உறுதிபடுத்திக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.