பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் கைது (Video)
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பெண்களிடமிருந்து தங்க சங்கிலிகளை அறுத்தெடுத்து செல்லும் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இந்நிலையில், இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபரொருவர் பொலிஸாரினால் நேற்று (29) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிசிரிவி காணொளியினூடாக உறுதிப்படுத்தப்பட்ட தகவலுக்கமையவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை, பின்வத்த பிரதேசத்தில் வைத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாணந்துறை பின்வத்த பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடையவர் என்பதும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்பதும் விசரணைகளில் உறுதிப்படுத்தபட்டுள்ளதாக எகொடஉயன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சந்தேகநபரினால் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வந்து இவ்வாறு தங்க சங்கிலிகளை அறுத்துச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர், நீண்ட நாட்களுக்கு முன்னர் அளுத்கம, பாணந்துறை, மொரட்டுவை மற்றும் எகொடஉயன ஆகிய பொலிஸ் பிரிவுகளில் திருடிய மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி, வீதிகளில் பயணிக்கும் பெண்களின் தங்க சங்கிலிகளை திருடி சென்றுள்ளார்
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் தங்க ஆபரணகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி சுமார் 10 இலட்சம் ரூபா என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்.