பசிலின் இந்திய விஜயம் தாமதமாகும் சாத்தியம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கான நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் டெல்லி விஜயம் பிற்போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் எதிர்வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தார்.
மல்வானையில் உள்ள வீடு மற்றும் காணி தொடர்பான வழக்கு இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராக வருகை தந்திருந்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் இந்திய பயணம் குறித்து கேள்வி எழுப்பினர்.
இந்தியாவில் கொரோனாத் தொற்று அதிகரித்திருப்பதால், தற்போது அங்கு செல்ல முடியாது எனப் பசில் ராஜபக்ஷ பதிலளித்தார்.